பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் பவுல் போக்பா, இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்காக விளையாடிவருகிறார். 26 வயதான இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் போது தனது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி டிசம்பர் மாதம் மீண்டும் அணிக்கு திரும்பினார்.
ஆனாலும் அவரது கணுக்காலில் வலி குறையாததால் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஓய்வில் இருக்கும் அவர் ஆப்பிள் ஜூஸ் என நினைத்து தனது சிறுநீரை பருகியதை ஜாலியாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். பார்பதற்கு ஆப்பிள் ஜூஸ் போலவே இருப்பதால் நான் எனது சிறுநீரை கூட குடிப்பேன் என நினைக்கிறேன் என்றார்.