கால்பந்து விளையாட்டில் அர்செனல் கால்பந்து கிளப்பானது இங்கிலாந்தில் மிக பிரபலமானது. இந்த அர்செனல் அணிக்காக விளையாடிவரும் ஓசில், கோலசினக் ஆகிய இருவரும் லண்டனுக்கு காரில் சென்றுள்ளனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தலைக்கவசம் அணிந்த இருவர் கத்தியைக் காட்டி கால்பந்து வீரர்களிடமிருந்த கைக்கடிகாரங்களைப் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது வீரர்கள் இருவரும் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்து, காவல் துறையில் புகார் அளித்தனர்.
அதன்பின் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அதேப் பகுதியைச் சேர்ந்த ஆஷ்லே ஸ்மித் என்பவரை கைது செய்து விசாரித்தது. விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரை லண்டன் காவல் துறையினர் ஹாரோ கிரவுன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.