ஐரோப்பிய யூனியன் கால்பந்து சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஜூன் 17ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் தள்ளிப்போடப்பட்டுள்ள சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான இறுதிப்போட்டி நடத்தப்படும் இடம் முடிவுசெய்யப்படும். இந்தப் போட்டி நடைபெறும் நாட்டில்தான் காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியை ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடத்த வேண்டும் என நகரத்தின் மேயர் ஜோஸ் லூயிஸ் மார்டினெஸ் அல்மெய்டா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான இறுதிப் போட்டியை நடத்தும் முனைப்பில் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன. மேலும் போட்டியை நடத்துவதற்கு நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.