ஐரோப்பா சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி நேற்று இஸ்டான்புல் நகரில் நடைபெற்றது. இதில், ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் வென்ற லிவர்பூல் அணி, ஐரோப்பா யுரோ கோப்பை வென்ற செல்சி அணியை எதிர்கொண்டது. இதைத்தொடர்ந்து, இரு அணிகளும் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் செல்சி அணியின் ஸ்ட்ரைக்கர் ஆலிவர் ஜிரோட் கோல் அடிக்க முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
பின்னர், இரண்டாவது பாதி தொடங்கியவுடன், லிவர்பூல் அணி அட்டாக்கிங் முறையில் ஈடுபட்டதால், 48ஆவது நிமிடத்தில் லிவர்பூல் வீரர் சடியோ மானே கோல் அடித்தார். பின்னர், மீண்டும் அவர் ஆட்டத்தின் 95ஆவது நிமிடத்தில் மிரட்டலான கோல் அடிக்க, லிவர்பூல் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில், செல்சி அணிக்கு 100ஆவது நிமிடத்தில் பெனால்டி வழங்கப்பட்டது. இதை அந்த அணியின் வீரர் ஜார்ஜின்ஹோ கோலாக மாற்ற ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.