தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#CHELIV: முதலிடத்தில் லிவர்பூல்! 11ஆவது இடத்தில் செல்சீ! - இங்லீஷ் ப்ரீமியர் லீக்

ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற இங்லீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் லிவர்பூல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் செல்சீ அணியை வீழ்த்தியது.

Liverpool

By

Published : Sep 23, 2019, 6:38 PM IST

இங்கிலாந்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான இங்லீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மீண்டும் ஒருமுறை இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல், செல்சீ, ஆர்சனல் உள்ளிட்ட அணிகள் இந்த சீசனை தொடங்கியுள்ளன.

ஆனால், செல்சீ அணிக்கு இம்முறை இந்த சீசன் சற்று மோசமாகவே தொடங்கியிருக்கிறது. விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றி, இரண்டு டிரா, ஒரு தோல்வியை சந்தித்திருக்கிறது. செல்சீ அணியின் ஜாம்பவான் வீரர் லாம்பார்ட் அந்த அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே அந்த அணி இதுபோன்று விளையாடுவது அவர்களது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆறாவது லீக் போட்டியில் செல்சீ அணி தனது சொந்த மைதானமான ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் லிவர்பூல் அணியை எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணிகளும் அட்டாக்கிங் முறையில் ஈடுபட்டு கோல் அடிக்க முயன்றன.

இதையடுத்து, 14ஆவது நிமிடத்திலேயே லிவர்பூல் அணியின் ஃபார்வார்ட் வீரர் சடியோ மானேவை செல்சீ டிஃபெண்டர்கள் ஃபவுல் செய்ததால், லிவர்பூல் அணிக்கு ஃப்ரீ கிக் வழங்கப்பட்டது. இதை லிவர்பூல் வீரர் டிரெண்ட் அலெக்சாண்டர் அர்னால்ட் கோலாக மாற்றி அசத்தினார்.

கோல் அடித்த மகிழ்ச்சியில் ஃபிர்மின்ஹோ

பின்னர், 25ஆவது நிமிடத்தில் செல்சீ வீரர், சீசர் அடித்த கோல் வார் முறையால் ரத்தானது. இதைத்தொடர்ந்து 30ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் ஸ்ட்ரைக்கர் ஃபிர்மின்ஹோ, ஹெட்டர் முறையில் கோல் அடித்து அசத்தினார். இதனால், லிவர்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முதல் பாதியில் முன்னிலை வகித்தது.

இதையடுத்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் செல்சீ வீரர்கள், லிவர்பூல் அணியைவிட பந்தை அதிகம் பாஸ் செய்தே விளையாடினாலும் கோல் அடிக்கவில்லை. இந்த நிலையில், 70ஆவது நிமிடத்தில் செல்சீ அணியின் மிட் ஃபில்டர் கான்டே லிவர்பூல் அணியின் டிஃபெண்டர்ஸை கடந்து அற்புதமான முறையில் கோல் அடித்தார். பின்னர், செல்சீ அணி இரண்டாவது கோலையும் அடித்து ஆட்டத்தை சமன் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நிறைவேறவில்லை.

கான்டேவின் கோல்

இறுதியில், லிவர்பூல் அணி 2-1 என்ற கணக்கில் செல்சீ அணியை வீழ்த்தியது. இந்த சீசனில் லிவர்பூல் அணிக்கு கிடைக்கும் ஆறாவது வெற்றி இதுவாகும். இதன்மூலம், லிவர்பூல் அணி 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மறுமுனையில், செல்சீ அணி விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றி, இரண்டு டிரா, இரண்டு தோல்வி என 8 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தில் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details