பிரீமியர் லீக் தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு லிவர்பூல் அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. பிரீமியர் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பிரீமியர் லீக் தொடர் மீண்டும் நடக்குமா என்று ரசிகர்களிடையே என்ற கேள்வி எழுந்தது.
அதையடுத்து ரசிகர்களின்றி தொடரினை நடத்த அரசும், ஃபிபாவும் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து நடந்த போட்டிகளில் லிவர்பூல் அணி கோப்பையைக் கைப்பற்றியது.
வழக்கமாக பிரீமியர் லீக் தொடரில், கடைசி ஆட்டம் வரையில் வெற்றியாளர் யார் என்பதில் கணிப்பு மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இம்முறையோ லிவர்பூல் அணி எவ்வித கணிப்புகளுக்கும் இடம் கொடுக்காமல் 7 போட்டிகள் மீதமுள்ள நிலையிலேயே, கோப்பையை உறுதி செய்தது.