தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'கார்ட் ஆஃப் ஹானர் மரியாதைக்கு லிவர்பூல் அணியினர் தகுதியானவர்கள்' - செல்சீ

பிரீமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற லிவர்பூல் அணிக்கு எதிராக ஆடும் போட்டியில், மான்செஸ்டர் சிட்டி அணி வீரர்கள் சார்பாக கார்ட் ஆஃப் ஹானர் மரியாதை வழங்கப்படும் என அந்த அணியின் மேனேஜர் பெப் கார்டியாலோ உறுதிப்படுத்தியுள்ளார்.

liverpool-deserve-guard-of-honour-says-man-city-manager-guardiola
liverpool-deserve-guard-of-honour-says-man-city-manager-guardiola

By

Published : Jun 28, 2020, 5:14 PM IST

கடந்த ஜூன் 26ஆம் தேதி மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் செல்சீ அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதனால் லிவர்பூல் அணி 7 போட்டிகள் எஞ்சியிருந்த நிலையிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

புள்ளிப்பட்டியலில் மான்செஸ்டர் சிட்டி அணி இரண்டாவது இடத்திலுள்ள நிலையில், வரும் வியாழக்கிழமை லிவர்பூல் அணியை எதிர்த்து மான்செஸ்டர் சிட்டி அணி ஆடவுள்ளது. இதனிடையே பிரிமியர் லீக் தொடரில் கடைசிப் போட்டிக்கு முன்னதாக வெற்றிபெற்ற அணிகளுக்கு கார்ட் ஆஃப் ஹானர் மரியாதை (guard of honour)வழங்குவது வழக்கம். இதனால் மான்செஸ்டர் அணி, லிவர்பூல் அணிக்கு சொந்த மைதானத்தில் மரியாதை செலுத்துமா என்ற கேள்வி எழுந்தது.

இதைப் பற்றி மான்செஸ்டர் அணியின் மேனேஜர் பெப் கார்டியாலோ பேசுகையில், ''நிச்சயம் லிவர்பூல் அணி வீரர்களுக்கு கார்ட் ஆஃப் ஹானர் மரியாதையைச் செலுத்துவோம். எங்கள் சொந்த மைதானத்திற்கு வரும் லிவர்பூல் அணி வீரர்களுக்கு, நம்ப முடியாத வகையில் வாழ்த்து தெரிவிப்போம். ஏனென்றால் லிவர்பூல் அணி வீரர்கள் கார்ட் ஆஃப் ஹானர் மரியாதைக்குத் தகுதியானவர்கள்'' என்றார்.

இதையும் படிங்க:தொடரிலிருந்து விலகிய வீரர்களை வெளுத்து வாங்கும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!

ABOUT THE AUTHOR

...view details