தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மெஸ்ஸி உள்பட 4 பிஎஸ்ஜி வீரர்களுக்கு கரோனா!

பிஎஸ்ஜி அணி வீரர்களான லயோனல் மெஸ்ஸி, ஜூயான் பெர்னட், செர்ஜியோ ரிகோ, நாதன் பிட்டுமஸாலா உள்ளிட்ட நால்வருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு கரோனா, Messi tested Coronavirus positive
கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு கரோனா

By

Published : Jan 2, 2022, 8:35 PM IST

பாரிஸ்: பிரெஞ்சு கிளப் அணியான பாரிஸ்-செய்ன்ட் ஜெர்மயன் எஃப்சி அணியில், அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லயோனல் மெஸ்ஸி விளையாடி வருகிறார். பார்சிலோனா அணியில் இருந்து கடந்தாண்டு வெளியேறிய மெஸ்ஸி, பிஎஸ்ஜி அணியில் இணைந்தார்.

இந்நிலையில், பிஎஸ்ஜி அணி வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அணி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "பிஎஸ்ஜி அணி வீரர்களான லியோனல் மெஸ்ஸி, ஜூயான் பெர்னட், செர்ஜியோ ரிகோ, நாதன் பிட்டுமஸாலா ஆகியோருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

3 வாரத்தில் நெய்மர்

தற்போது, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுத் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். வீரர்கள் மட்டுமில்லாமல் அணி நிர்வாகத்தினர் சிலருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், ஜனவரி 9ஆம் தேதிவரை அணியின் மருத்துவ நிபுணர்களுடன் உடல் சார்ந்த சிகிச்சையில் இருப்பார் எனவும், அவர் அணிக்குத் திரும்ப மூன்று வாரங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்ஜி அணி, பிரெஞ்சு கோப்பைத் தொடரில் வானஸ் அணியுடன் நாளை (ஜனவரி 3) மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: PK League Dabang Delhi KC vs Tamil Thalaivas: பரபரப்பான போட்டி டிராவில் முடிந்தது

ABOUT THE AUTHOR

...view details