கால்பந்து போட்டியின் மிக உயரிய விருதான பாலன் டி ஓர் விருது(Ballon d'Or) ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டிற்கான பாலன் டி ஓர் விருது நேற்று அறிவிக்கப்பட்டது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 2021ஆம் ஆண்டிற்கா சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதை தட்டிச் சென்றுள்ளார்.
இந்த விருதை மெஸ்ஸி ஏழாவது முறையாகப் பெறுகிறார். பிஎஸ்ஜி கிளப் அணிக்கா விளையாடிவரும் மெஸ்ஸி 2009, 2010, 2011, 2012, 2015, 2019 ஆகிய ஆறு ஆண்டுகளிலும் இந்த விருதை கைப்பற்றியுள்ளார்.
விருது பட்டியலில் போலாந்தைச் சேர்ந்த ராபர்ட் லெவன்டோஸ்கி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 34 வயதான மெஸ்ஸி 2021 கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையை அர்ஜென்டினா அணிக்கா வென்றார். 2022ஆம் ஆண்டு பிபா கால்பந்து உலகக்கோப்பையை வெல்வதே மெஸ்ஸியின் வாழ்நாள் கனவாக உள்ளது.
பிஎஸ்ஜி கோல்கீப்பரான டோனருமா சிறந்த கோல்கீப்பருக்கான விருதையும், பார்சிலோனாவைச் சேர்ந்த அலெக்சியா புடெல்லாஸ் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதையும் வென்றுள்ளார்.
இதையும் படிங்க:ஐந்தாண்டுகளில் குடியுரிமையை துறந்த ஆறு லட்சம் இந்தியர்கள்