தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

700ஆவது கோல் அடித்து சாதனையாளர்களின் பட்டியலில் இணைந்த மெஸ்ஸி! - கால்பந்து போட்டிகளில் 700 கோல்களை அடித்த வீரர்களின் பட்டியல்

லா லிகா கால்பந்து தொடரில் அத்லெடிக்கோ மாட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் 700ஆவது கோல்  அடித்த ஏழாவது வீரர் என்ற சாதனையை பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி படைத்துள்ளார்.

Lionel Messi scores 700th career goal with 'Panenka' penalty
Lionel Messi scores 700th career goal with 'Panenka' penalty

By

Published : Jul 2, 2020, 9:29 AM IST

2019-20 லா லிகா கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில், நடப்புச் சாம்பியன் பார்சிலோனா - அத்லெடிக்கோ மாட்ரிட் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இதனால் புள்ளிகள் தரவரிசை பட்டியலில், பார்சிலோனா அணி 33 போட்டிகளில் 70 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இப்போட்டியின் 50ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி கிக்கை அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி அற்புதமாக கோலாக்கினார்.

இதன்மூலம், கால்பந்து போட்டிகளில் கிளப் மற்றும் தேசிய அணிக்காகச் சேர்ந்து 700 கோல் அடித்த ஜோசப் பின்கன், ரொமாரியோ, பீலே, புஸ்காஸ், கெர்ட் முல்லர், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரது வரிசையில் மெஸ்ஸி ஏழாவது வீரராக இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பார்சிலோனா அணிக்காக 724 போட்டிகளில் 630 கோல்களும், அர்ஜென்டினாவிற்காக 138 போட்டிகளில் 70 கோல்கள் அடித்துள்ளார். இதுமட்டுமின்றி தற்போது கால்பந்து போட்டிகளில் விளையாடி வரும் ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக இவர் இச்சாதனையை படைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details