நட்சத்திட கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள் என கால்பந்து தொடர்பான அனைத்து தரப்பினரிடமும் கேட்கப்படும் கேள்வி, உங்களுக்கு மெஸ்ஸி பிடிக்குமா அல்லது ரொனால்டோ பிடிக்குமா? என்பது தான். கடந்த தசாப்தத்தில் இந்தக் கேள்வியைக் கடந்து வராத ஐரோப்பா மக்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவரிடம் கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஏனென்றால் மெஸ்ஸியும், ரொனால்டோவும் தொடர்ந்து சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை உருவாக்கிக்கொண்டே வருகிறார்கள். இவர்களின் சாதனையை பின்வரும் வீரர்கள் எட்டுவார்களா என்பது பலருக்கும் சந்தேகமே.
இந்நிலையில் அதே கேள்வியை 2019-20ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோப்பையை வெல்லப்போகும் லிவர்பூல் அணியின் மேனேஜர் சுர்ஜன் குளோப்பிடமும் கேட்கப்பட்டது. அதற்கு அவர், '' நாங்கள் இரு வீரர்களுக்கு எதிராகவும் ஆடியுள்ளோம். அவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது முடியாத விஷயம். ஒரு சரியான கால்பந்து வீரரை வரைய வேண்டும் என்றால், ரொனால்டோ அளவிற்கு உயரம் இருக்க வேண்டும், ரொனால்டோ அளவிற்கு உயரம் குதிக்க வேண்டும், ரொனால்டோ அளவிற்கு வேகமாக ஓட வேண்டும். அந்த அளவிற்கு ரொனால்டோ கால்பந்து வீரர்களுக்கு உரித்தான அனைத்து உடற்தகுதிகளையும் வைத்துள்ளார். ஆனால் எனக்கு மெஸ்ஸியை தான் பிடிக்கும்.
ஒரு கால்பந்து வீரர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நேர்மாறாக மெஸ்ஸி சிறுவயதில் இருந்தார். மிகவும் கடினமாகப் பார்க்கும் விஷயங்களை மிகவும் எளிதாக செய்து காட்டுவார். அதனால் என்னவோ மெஸ்ஸியின் ஆட்டம் எனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது்'' என்றார்.
இதையும் படிங்க:சரித்திரத்தில் முதல்முறையாக கால்பந்தாட்ட வீரர் கையில் லாரஸ் விருது!