தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து - மெஸ்ஸி மாபெரும் சாதனை - மெஸ்ஸி சாதனை

பிரபல கால்பந்தாட்ட நட்சத்திரமான அர்ஜென்டினாவைச் சேர்ந்த லயனல் மெஸ்ஸி, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

messi

By

Published : Oct 24, 2019, 11:44 PM IST

ஐரோப்பிய யூனியனின் கால்பந்து கூட்டமைப்பால் ஆண்டுதோறும் UEFA சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. இதனிடையே இந்தத் தொடரின் எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோன கிளப் அணிக்கும் செக் குடியரசைச் சேர்ந்த கிளப் அணியான ஸ்லேவியா பிராகா அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது.

இப்போட்டி தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். அவர் அடித்த இந்த கோலின் மூலம் சாம்பியன்ஸ் லீக் தொடரில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக கோல் அடிக்கும் வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார். மேலும் 33 வெவ்வேறு கிளப்புகளுக்கு எதிராக கோல் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மாட்ரிட் ஸ்ட்ரைக்கர் ரவுலுடன் பகிர்ந்துள்ளார்.

கோல் அடித்த உற்சாகத்தில் மெஸ்ஸி

இதுமட்டுமல்லாது சாம்பியன்ஸ் லீக் தொடரின் குரூப் ஆட்டங்களில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பட்டியலிலும் மெஸ்ஸி (67 கோல்கள்) உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 62 கோல்கள் அடித்து அடுத்த இடத்தில் உள்ளார்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்ஸி சமீபத்தில் ஆண்டின் சிறந்த வீரர் என்ற விருதைப் பெற்றதோடு ஆறாவது முறையாக தங்கக் காலணி பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்லேவியா பிராகா அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details