ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கிளப் உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெயர்ன் முனிச்! - ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி

கால்பந்து கிளப் அணிகளுக்கான உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் அல் அஹ்லி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பெயர்ன் முனிச் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

Lewandowski scores twice as Bayern reach FIFA Club WC final
Lewandowski scores twice as Bayern reach FIFA Club WC final
author img

By

Published : Feb 9, 2021, 9:29 PM IST

கால்பந்து கிளப் அணிகளுக்காககடந்த 2000ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கிளப் உலகக்கோப்பைத் தொடரை 'ஃபிஃபா' நடத்தி வருகிறது. இந்தாண்டிற்கான சீசன் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பெயர்ன் முனிச் அணி, அல் அஹ்லி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெயர்ன் முனிச் அணிக்கு கேப்டன் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பெயர்ன் முனிச் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய லெவாண்டோவ்ஸ்கி ஆட்டத்தின் 83ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெயர்ன் முனிச்

பின்னர் ஆட்ட நேர முடிவில் பெயர்ன் முனிச் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அல் அஹ்லி அணியை வீழ்த்தி, கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதையும் படிங்க:ஆஸ்திரேலியன் ஓபன் : இரண்டாவது சுற்றில் நடால்!

ABOUT THE AUTHOR

...view details