இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று (ஜன.20) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லெய்செய்டர் சிட்டி அணி - செல்சி அணியை எதிர்த்து விளையாடியது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியின் ஏழாவது நிமிடத்திலேயே லெய்செஸ்டர் சிட்டி அணியின் வில்பிரட் என்டிடி (Wilfred Ndidi) கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பின் ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் ஜேம்ஸ் மேடிசன் மூலம் லெய்செஸ்டர் அணிக்கு மீண்டுமொரு கோல் கிடைத்தது.
இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் லெய்செஸ்டர் சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் தனது டிஃபென்ஸை வலிமைப்படுத்திய லெய்செஸ்டர் அணி, செல்சி அணியின் கோலடிக்கும் முயற்சிகளை தடுத்தது.
இதனால் ஆட்டநேர முடிவில் லெய்செஸ்டர் சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இபிஎல் கால்பந்து தொடரின் புள்ளி பட்டியலில் 38 புள்ளிகளை பெற்று லெய்செஸ்டர் சிட்டி அணி முதலிடத்திற்கும் முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க:தாய்லாந்து ஓபன்: சாய் பிரனீத்திற்கு கரோனா உறுதி!