கரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் நடப்பு சீசனுக்கான லா லிகா தொடர் மார்ச் 12ஆம் தேதி நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்பெயினில் கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததையடுத்து, நடப்பு சீசன் தொடர் மீண்டும் ஜூன் 12ஆம் தேதி தொடங்கப்படும் என ஸ்பானிஷ் கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஜூன் 12 முதல் ஜூலை 19 வரை 33 நாள்களில் நடப்பு சீசனை முடிக்கவும் ஸ்பானிஷ் கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் லா லிகா தொடர் தொடங்குவது குறித்து பேசிய பார்சிலோனா அணியின் முன்னாள் தலைவர் ஜோன் காஸ்பர்ட், "கரோனா வைரஸ் காரணமாக போட்டிகள் நிறுத்திவைக்கப்படுவதற்கு முன், ரியல் மாட்ரிட் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்திருந்தால் லா லிகா தொடர் முடிவுக்கு வந்திருக்கும்" என விமர்சித்துள்ளார்.