தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கரோனா சூழல் கட்டுக்குள் வந்த பின் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்: தலைவர் ஜாவித் தேபஸ் - கரோனா வைரஸ்

கரோனா சூழல் கட்டுக்குள் வந்த பின்னரே லா லிகா கால்பந்து போட்டிகளைக் காண ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என லா லிகா அமைப்பின் தலைவர் ஜாவித் தேபஸ் தெரிவித்துள்ளார்.

la-liga-not-ruling-out-fans-in-stadiums-this-season
la-liga-not-ruling-out-fans-in-stadiums-this-season

By

Published : Jun 8, 2020, 4:00 PM IST

கரோனா வைரஸ் காரணமாக மார்ச் 11ஆம் தேதிக்கு பின் லா லிகா கால்பந்து போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கரோனா சூழல் ஸ்பெய்னின் சில பகுதிகளில் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மீண்டும் கால்பந்து போட்டிகளை நடத்த அரசு அனுமதித்துள்ளது.

இதனால் லா லிகா தொடர் வரும் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதற்காக கால்பந்து வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போட்டிகள் நடக்கும் மைதானங்களுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து லா லிகா தலைவர் ஜாவித் தேபஸ் பேசுகையில், ''ஸ்பெய்னின் சில பகுதிகளில் கரோனா வைரஸ் முழுவதும் கட்டுக்குள் வந்துள்ளன. பார்சிலோனா, மாட்ரிட் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இதனால் சில பகுதிகளில் ரசிகர்களை அனுமதிப்பது சரியாக இருக்காது. ஒரு சில கிளப் அணிகளுக்கு அது சாதகமாக திரும்பக்கூடும்.

லா லிகா நிர்வாகமும், அரசும் இந்த சீசனில் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என பேசியுள்ளோம். ஆனால் ஸ்பெய்ன் முழுமையாக கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தால், நிச்சயம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

விர்சுவல் தொழிற்நுட்பத்தின் உதவியுடன் ரசிகர்கள் மைதானங்களில் இருப்பது போல் தொலைக்காட்சியில் நேரலை செய்வதற்கு திட்டமிட்டு வருகிறோம். பத்திரிகையாளர்கள் சிலருக்கு மட்டுமே மைதானங்களில் நேரடியாக போட்டிகளைப் பார்ப்பதற்கு அனுமதியளிக்கப்படும்'' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details