தமிழ்நாடு

tamil nadu

இந்தக் கோடையில் லா லிகா தொடங்கப்படாது: ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சர்

By

Published : Apr 27, 2020, 2:36 PM IST

மாட்ரிட்: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள கால்பந்து போட்டிகள் அனைத்தும், கோடை காலத்துக்குப் பிறகுதான் தொடங்கப்படும் என ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சர் இலா தெரிவித்துள்ளார்.

la-liga-might-not-start-before-summer-this-year-says-spains-health-minister
la-liga-might-not-start-before-summer-this-year-says-spains-health-minister

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மார்ச் முதல் வாரத்திலேயே பிரபல கால்பந்து தொடரான லா லிகா கால்பந்து தொடர் நிறுத்தப்பட்டது. இதனால் கால்பந்து ரசிகர்கள் மீண்டும் எப்போது லா லிகா தொடர் தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சர் இலா செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தக் கோடை காலத்தில் நிச்சயம் கால்பந்து போட்டிகள் ஸ்பெயினில் தொடங்கப்படாது. எப்போது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு என்னால் பதில் கூற இயலாது. தற்போதைய சூழல் சரியான பின், கால்பந்து நிச்சயம் தொடங்கப்படும்'' என்றார்.

இதனிடையே ஸ்பெயின் தேசிய விளையாட்டுக் கழகம், ராயல் ஸ்பேனிஷ் கால்பந்து கழகம், லா லிகா ஆகிய அமைப்புகள் நடத்திய ஆலோசனைகளில், கால்பந்து வீரர்கள் பயிற்சிகளுக்குத் திரும்பலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் லா லிகா தொடர் தொடங்கப்படும் என்ற செய்திக்கு சுகாதாரத் துறை அமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் ஸ்பெயினில் கரோனா வைரசால் இதுவரை 23 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வடிவேலு டயலாக்கில் தோனியை கலாய்த்த சிஎஸ்கே!

ABOUT THE AUTHOR

...view details