தமிழ்நாடு

tamil nadu

லாலிகா: அத்லெட்டிகோ மாட்ரிட்டிற்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்த அத்லெட்டிக் பில்பாவ்

By

Published : Jun 15, 2020, 3:59 PM IST

Updated : Jun 15, 2020, 4:05 PM IST

அத்லெட்டிகோ மாட்ரிட் அணிக்கு எதிராக அத்லெட்டிக் பில்பாவ் ஆடிய ஆட்டம் 1-1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

la-liga-atletico-madrid-play-out-1-1-draw-against-athletic-bilbao
la-liga-atletico-madrid-play-out-1-1-draw-against-athletic-bilbao

ஜூன் 12ஆம் தேதி முதல் மீண்டும் லாலிகா கால்பந்து தொடர் தொடங்கிய நிலையில், நேற்று அத்லெட்டிகோ மாட்ரிட் அணியை எதிர்த்து அத்லெட்டிக் பில்பாவ் அணி ஆடியது.

இதன் முதல் பாதி ஆட்டத்தில் அத்லெட்டிக் பில்பாவ் அணியின் இக்னர் முதல் கோல் அடிக்க, இதற்கு பதிலடியாக மாட்ரிட் அணியின் டிகோ கோஸ்டா கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 1-1 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தன.

இதையடுத்து நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதனைத்தொடர்ந்து அத்லெட்டிகோ மாட்ரிட் அணியின் மேனேஜர் டீகோ சிமோன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இரண்டாம் பாதி ஆட்டத்தில் நாங்கள் வெற்றிபெறுவதற்கு சில வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அதனை நாங்கள் தவறவிட்டோம். இனிவரும் ஒவ்வொரு போட்டியையும் இறுதிப் போட்டியாகவே நினைத்து வெற்றிபெற முயல்வோம்'' என்றார்.

Last Updated : Jun 15, 2020, 4:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details