கோவாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் மோதின.
அதிரடி தொடக்கம் தந்த ஈஸ்ட் பெங்கால்
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியில், ஆரம்பம் முதலே ஈஸ்ட் பெங்கால் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.
அதன் பயனாக ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை பகாரி கோன் கோலடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இறுதி நிமிடத்தில் தோல்வியை தவிர்த்த கேரளா
அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இதனால் இரு அணிளும் கோலடிக்க திணறின.
பின்னர் ஆட்டத்தின் முடிவில் கிடைத்த கூடுதல் நேரத்தை சரியாக பயன்படுத்தி 90+5ஆவது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ஜீக்சன் சிங் கோலடித்து, கேரள அணியை தோல்வியிலிருந்து காப்பற்றினார்.
ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற வீதத்தில் இருந்ததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி மூன்று புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும், ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணி 2 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திலும் உள்ளது.
இதையும் படிங்க:முஷ்டாக் அலி தொடரிலிருந்து முரளி விஜய் விலகல்!