இத்தாலியின் பிரபல கால்பந்து தொடரான சீரி ஏ தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று (ஜன.18) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி - இண்டர் மிலான் அணியை எதிர்கொண்டது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியின் ஏழாவது நிமிடத்திலேயே இண்டர் மிலன் அணியின் ஆர்டுரோ விடல் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இண்டர் மிலன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட இண்டர் மிலனுக்கு நிக்கோலோ பரெல்லா மூலம் மீண்டுமொரு கோல் கிடைத்தது. இறுதிவரை போராடிய ஜுவென்டஸ் அணியால் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் இண்டர் மிலன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இண்டர் மிலன் அணி 40 புள்ளிகளுடன் சீரி ஏ புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.
இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி!