கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 79 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழாயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே பிரபல சீரி ஏ கால்பந்து கிளப் அணியான யுவண்டஸின் ருகானி, கரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த அணியின் அனைத்து வீரர்களும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட யுவண்டஸ் அணியின் பிளேஸ் மாதுடி தொடர்ந்து மற்ற வீரர்கள், அணியின் நிர்வாக அலுவலர்கள் அனைவருக்கும் கரோனா வைரஸ் கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் யுவண்டஸ் அணியின் மிட் ஃபீல்டர் பிளேஸ் மட்டூடி (Blaise Matuidi) கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் ஸ்பெயின் கிளப் அணியான வேலன்சியா அணியில் 35 சதவிகிதம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சீரி ஏ கால்பந்து தொடரின் கிளப் அணிகளான சாம்ப்டோரியா, ஃபியோரிண்டினா ஆகிய அணிகளின் வீரர்களுக்கும் கரோனா பாதிப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அனைத்து உள்நாட்டு கால்பந்து தொடர்களும் ஏப்ரல் 3ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இத்தாலி கால்பந்து வீரருக்கு கொரோனா பாதிப்பு!