பிரேசில் நாட்டைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோ. தனது சிறப்பான ஆட்டத்தால் பிரேசில் அணிக்கு பல வெற்றிகளைத் பெற்றுத் தந்துள்ளார். குறிப்பாக, 2002 ஃபிபா உலகக்கோப்பை கால்பந்துத் தொடரை பிரேசில் அணி வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தார்.
சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி, பார்சிலோனா, ஏ.சி. மிலன் உள்ளிட்ட கிளப் அணிக்காகவும் விளையாடியுள்ளார். இந்த நிலையில், இவரும் இவரது சகோதரர் ராபர்டோ ஆகியோர் போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி பராகுவே நாட்டிற்குள் செல்ல முயன்றதாக, அந்நாட்டு காவல் துறையினரால் கடந்த ஐந்தாம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியது ரொனால்டினோவுக்கு தெரியாது என அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இதனால், ரொனால்டினோ அவரது சகோதரர் ஆகியோருக்கு நிபந்தனையுடன் விடுதலை செய்யக்கோரி பராகுவே நீதிமன்றத்தில் ரொனால்டினோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த பராகுவே நீதிமன்றம் ரொனால்டினோவையும் அவரது சகோதரரையும் நிபந்தனைகளுடன் விடுவிக்க மறுத்துள்ளது. இதனிடையே, ரொனால்டோவின் பிணைக்காக அவரது அபராத தொகை மூன்று மில்லியன் டாலரை கட்டுவதற்கு மெஸ்ஸி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கொரோனா பீதி: மான்செஸ்டர் சிட்டி - ஆர்சனல் போட்டி தள்ளிவைப்பு!