ஜெர்மனியில் பிரபலமான பண்டஸ்லீகா கால்பந்து தொடர் நடைபெற்றுவருகிறது. அந்தத் தொடரின் முன்னணி அணியான பேயர்ன் முனிச், 33 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனிடையே அந்த அணியின் முக்கிய டிஃபெண்டரான ஜெரோம், ப்ரீமியர் லீக் கிளப் அணியான ஆர்சனல் அணிக்கு இடமாறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பேயர்ன் முனிச் அணியின் இடைக்காலப் பயிற்சியாளர் ஃபிளிக் பேசுகையில், ”ஜெரோம் பேயர்ன் அணியின் முக்கிய வீரர். வதந்திகளைப் பற்றி நான் எப்போதும் கவலைப்படப்போவதில்லை. ஜெரோம் பயிற்சிக்கு வருகையிலும் விடுமுறைக்குப் பின் வருகையிலும் மிகச்சிறந்த முறையிலே தயாராகி வந்தார்.