கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பார்வையாளர்களின்றி ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து தொடர் நடந்து வருகிறது. இதன் புள்ளிப்பட்டியலில் 67 புள்ளிகளுடன் பேயர்ன் முனிச் அணி முதலிடத்திலும், டார்மண்ட் அணி இரண்டாம் இடத்திலும் உள்ளது. அதேபோல் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் பேயர்ன் முனிச் அணியின் ராபர்ட் 30 போட்டிகளில் 43 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
37 போட்டிகளில் 43 கோல்கள்; வாழ்நாளின் சிறந்த ஃபார்மில் ராபர்ட்: ஜாவி - கரோனா வைரஸ் பாதிப்பு
37 போட்டிகளில் 43 கோல்கள் அடித்துள்ள பேயர்ன் முனிச் அணியின் ராபர்ட், அவரது வாழ்நாளின் சிறந்த ஃபார்மில் உள்ளதாக அந்த அணியின் சக வீரர் ஜாவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள பேயர்ன் அணியின் ஜாவி, '' 37 போட்டிகளில் 43 கோல்கள் அடித்து ராபர்ட், தனது வாழ்நாளின் சிறந்த ஃபார்மில் உள்ளார். உலகின் சிறந்த 9ஆம் ஜெர்சி நம்பர் வீரராக உள்ளார். இதே ஃபார்மை ஆகஸ்ட் மாதம் வரை எடுத்துச் செல்வார் என நம்புகிறேன்.
அவர் எதிர்காலத்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடப்போகிறார் என்று பயம் எதுவும் இல்லை. ஏனென்றால் பேயர் முனிச் அணியிலிருந்து பல முன்னணி வீரர்கள் சென்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு இணையான மாற்று வீரர்களை பேயர்ன் அணி எளிதாக கண்டறிந்துள்ளது'' என்றார்.