தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல்: பெங்களூருவைப் பந்தாடியது ஜாம்ஷெட்பூர்! - பெங்களூரு எஃப்சி

ஐஎஸ்எல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

Jamshedpur FC hold on to sixth spot after beating Bengaluru in five-goal thriller
Jamshedpur FC hold on to sixth spot after beating Bengaluru in five-goal thriller

By

Published : Feb 26, 2021, 1:28 PM IST

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடையவுள்ளன. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கிய 16ஆவது நிமிடத்திலேயே ஜாம்ஷெட்பூர் அணியின் ஸ்டீபன் எஸி கோலடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 34ஆவது நிமிடத்தில் சீமின்லன் டங்கலும், ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் டேவிட் கிராண்டும் கோலடித்து ஜாம்ஷெட்பூர் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. அதன்பின் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சுதாரித்து விளையாடிய பெங்களூரு அணி எதிரணியின் கோலடிக்கு முயற்சிகளைத் தகர்த்தது.

அதன்பின் தடுப்பாட்டத்தில் இறங்கிய பெங்களூரு அணிக்கு ஆட்டத்தின் 62ஆவது நிமிடத்தில் ஃப்ரான் கான்ஸாலெஸும், ஆட்டத்தின் 71ஆவது நிமிடத்தில் சுனில் சேத்ரியும் கோலடித்து நம்பிக்கையளித்தனர்.

இருப்பினும் ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணியால் மற்றொரு கோலை அடிக்க முடியவில்லை. இதன்மூலம் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது.

இதையும் படிங்க: விஜய் ஹசாரே: பிரித்வி ஷா இரட்டை சதம்; மும்பை இமாலய வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details