லண்டன் (இங்கிலாந்து): ஐரோப்பிய நாடுகளின் முன்னணி 24 அணிகள் மோதிய யூரோ கோப்பையின் இறுதிப்போட்டி இன்று (ஜூலை 12) நடைபெற்றது. இந்தப்போட்டியில், ஜார்ஜியோ சியெலினி தலைமையிலான இத்தாலி அணியும், ஹேரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.
கடந்து வந்த பாதை:
இரு அணிகளும் இந்தொடர் முழுவதும் தோல்வியே தழுவாமல், நேர்த்தியாக விளையாடி வந்தன. இந்த தொடரில் இத்தாலி அணி 4 கோலையும், இங்கிலாந்து அணி ஒரு கோலையும் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தாலி 4 முறை உலக சாம்பியன் என்றாலும், கடைசியாக யூரோ கோப்பை வென்றது 1968-இல் தான். இங்கிலாந்து அணிக்கு இதுதான் முதல் யூரோ கோப்பை இறுதிப்போட்டி. தொடர் ஆரம்பத்தில் அதிக எதிர்பார்ப்பில்லமல் இருந்த இரு அணிகளும், இறுதிப்போட்டிக்கு வந்துள்ளதால் இந்த போட்டிக்கு உலக முழுவதும் பெரும் எதிர்பாரப்பு எழுந்தது.
ஆரம்ப அதிர்ச்சி:
இவ்வுளவு எதிர்பார்ப்பு மிக்க போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இரண்டாவது நிமிடத்திலேயே கோல் அடித்து இத்தாலி அணிக்கு மட்டுமல்ல, போட்டியைக் கண்டுகொண்டிருந்த அத்தனை பேருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
கீரன் டிரிப்பியர் கொடுத்த அருமையான க்ராஸ் பாஸில், லுக் ஷா அடித்த அந்த கோல் இத்தாலியின் தடுப்புச் சுவரை சுலபமாக உடைத்துச்சென்றது. இந்த கோலுக்கு பின்னர் இத்தாலி பெரும் தாக்குதலை தொடுக்கும் எனக் கருதப்பட்டது.
ஆனால், இத்தாலி அணியால் கோல் போஸ்டைக் கூட நெருங்க முடியவில்லை. இதன் நடுவே ஆறாம் நிமிடத்தில் இத்தாலிக்கு கிடைத்த ஃப்ரி-கிக் வாய்ப்பை ஃபெடரிகோ சிசா விணடித்தார்.
இத்தாலியின் திணறல்:
அதன் பின்னர், இங்கிலாந்து அணி தாக்குதல் நிறுத்தி தடுப்பாட்டத்தை கைகொண்டது. இத்தாலியின் முன்கள வீரர் சிரோ இம்மொபைலிடம், இங்கிலாந்து அணி பந்தை செல்லவே விடமால் பார்த்துக்கொண்டது.
இங்கிலாந்து அணி, தனது சொந்த நாட்டு ரசிகர்களுக்கிடையே விளையாடுவதால் முதல் பாதியில் பெரும் உற்சாகத்தோடு காணப்பட்டது. இதனாலேயே இத்தாலி அணி பந்தை நீண்ட நேரம் தன்வசம் வைத்திருந்தாலும், அவர்களால் பாக்ஸ் உள்ளே பந்தை கொண்டு செல்லவே இயலாதபடி இங்கிலாந்து கவனித்துக்கொண்டது.
முதல் பாதியில் நான்கு நிமிடம் கூடுதல் நேரமாக கொடுக்கப்பட்ட நிலையில், இம்மொபைல் கோல் வாய்ப்பை உருவாக்க, இங்கிலாந்தின் டி லொரோன்சோ அணையாக நின்று அந்த வாய்ப்பை தடுத்தார். இதன்மூலம், இறுதிப்போட்டியின் முதல்பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இம்மொபைல் அவுட்:
யாரும் எதிர்பார்க்காத முடிவாக, இரண்டாம் பாதியில் இத்தாலியின் இம்மொபைலுக்கு பதிலாக பெரார்டி களத்துக்குள் புகுந்தார். இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும், இரண்டாம் பாதியில் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்திவந்த இத்தாலி இந்த போட்டியிலும் அதையே தொடர்ந்தது.