2019-20 சீசனுக்கான கோப்பா இத்தாலி கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி போட்டி நேற்று மிலனில் நடைபெற்றது. இதில், யுவென்டஸ் - ஏசி மிலன் அணிகள் மோதின. முதல்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறியதால், இரண்டாம் பாதி ஆட்டம் சுடுபிடிக்கத் தொடங்கியது. ஆட்டத்தின் 61ஆவது நிமிடத்தில் ஏசி மிலன் வீரர் ஆன்டே ரெபிக் கோல் அடித்து அசத்தினார்.
ஆட்டம் முடிய 19 நிமிடங்கள் இருந்த நிலையில், யுவென்டஸ் வீரர் டிபாலாவை தாக்கியதால் ஏசி மிலன் அணியின் டிஃபெண்டர் தியோ ஹெர்னான்டஸுக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டு களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, ஏசி மிலன் அணி 10 வீரர்கள் கொண்டு விளையாடிய போதும், அதை சாதகமாக பயன்படுத்தி யுவென்டஸ் அணி கோல் அடிக்க முடியாமல் திணறியது. ஆட்டம் 90 நிமிடங்கள் எட்டிய நிலையில், கூடுதலாக ஆறு நிமிடங்கள் வழங்கப்பட்டன.