கேரளா பிளாஸ்டர்ஸ் - ஹைதராபாத் எஃப்சி அணிகளுக்கு இடையேயான ஐஎஸ்எல் லீக் ஆட்டம் கோவாவின் பாம்போலியத்தில் நேற்று (டிசம்பர் 27) நடைபெற்றது.
இப்போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கேரள அணிக்கு ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் அப்துல் கோலடித்து, அணியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியிலும் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேரள அணிக்கு ஆட்டத்தின் 88ஆவது நிமிடம் ஜோர்டன் முர்ரே கோலடித்து வெற்றியை உறுதிசெய்தார். மறுமுனையில் ஹைதராபாத் அணியால் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை.
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தி, நடப்பு ஐஎஸ்எல் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இதையும் படிங்க:’பாக்ஸிங் டே’ டெஸ்ட் : சதம் விளாசிய வில்லியம்சன் ; ஆரம்பத்திலேயே தடுமாறும் பாகிஸ்தான்