ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சென்னையில் நடைபெற்ற முதல்கட்ட அரையிறுதிப் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோவாவை வீழ்த்தியது.
இந்நிலையில், நேற்று பெங்களூருவில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியின் முதல் சுற்றில் நடப்புச் சாம்பியன் பெங்களூரு எஃப்சி அணி, கொல்கத்தாவுடன் (ஏடிகே) மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 31ஆவது நிமிடத்தில் பெங்களூரு வீரர் ஜூவானன் அடித்த பந்தை ஏடிகே கோல்கீப்பர் பிடிக்கத் தவறினார்.
இதனால், அவரது கையிலிருந்து நழுவிவந்த பந்தை பெங்களூரு வீரர் டேஷோர்ன் பிரவுன் லாவகமாக கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து, ஆட்டத்தின் 83ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் தடுப்பாட்ட வீரர் நிஷு குமார், ஏடிகே வீரர் ராய் கிருஷ்ணாவை ஃபவுல் செய்ததால் அவருக்கு நடுவர்ரெட் கார்ட் வழங்கினார்.