தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல் கால்பந்து: ஜாம்சத்பூரை புரட்டியெடுத்த ஏடிகே! - ராய் கிருஷ்ணா

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி  3- 0  என்ற கோல்கணக்கில் ஜாம்சத்பூர் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

ISL: Roy Krishna nets brace as ATK thrash Jamshedpur 3-0
ISL: Roy Krishna nets brace as ATK thrash Jamshedpur 3-0

By

Published : Feb 2, 2020, 11:56 PM IST

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி, ஜாம்சத்பூர் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏடிகே அணிக்கு ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 02’ஆவது நிமிடத்திலேயே கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.

இதனையடுத்து முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஏடிகே அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையுடன் இரண்டாம் பாதி ஆட்டத்தை தொடங்கியது. அதில் ஆட்டத்தின் 59’ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் எடு கார்சியா கோலடித்து அசத்த ஏடிகே அணியின் வெற்றியானது உறுதியானது.

அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 75’ஆவது நிமிடத்தில் ராய் கிருஷ்ணா மீண்டுமொரு கோலடிக்க ஆட்டம் மொத்தமும் ஏடிகே அணிக்கு சாதகமானது. ஆனால் இறுதிவரை போரடிய ஜாம்சத்பூர் அணியால் ஏடிகே அணியின் டிஃபென்ஸை முறியடிக்க இயலாததால் அந்த அணியால் ஒரு கோல் கூட அடிக்க இயலவில்லை.

இறுதியில் ஆட்டநேர முடிவில் கொல்கத்தாவின் ஏடிகே அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜாம்சத்பூர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஏடிகே அணி இந்த சீசனில் 30 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.

இதையும் படிங்க: ஐ.எஸ்.எல். கால்பந்து: சரமாரியாகக் கோலடித்து அசத்திய சென்னை: கேரளா அணியை வீழ்த்தி அபாரம்!

ABOUT THE AUTHOR

...view details