ஐஎஸ்எல் ஏழாவது சீசன் தொடருக்கான ஒடிசா எஃப்.சி. அணியில் இளம் வீரர்களான போடோ, பிரேம்ஜித் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இளம் வீரர்களை ஒப்பந்தம் செய்த ஒடிசா எஃப்.சி அணி - போடோ
ஒடிசா எஃப்.சி அணியில் இளம் கால்பந்து வீரர்களான போடோ, லய்ஷ்ராம் பிரேம்ஜித் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த அணியின் தலைவர் ரோஹன் ஷர்மா பேசுகையில், '' பிரேம்ஜித், போடா ஆகியோரை ஒப்பந்தம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. பிரேம்ஜித்தின் வேகம் பற்றி அனைவருக்கும் தெரியும். அவருக்கு கால்பந்தில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் பிரேம்ஜித் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார்.
போடோவுக்கு அறிமுகம் தேவையில்லை. அவரின் ஆட்டம்தான் அவரின் அறிமுகமே. அவரது ஆட்டமே அவரை ஒப்பந்தம் செய்ய வைத்தது. அவர் இழந்த ஃபார்மை மீண்டும் கொண்டுவருவார்'' என்றார்.