இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த சீசனில் ஒரு வெற்றி, ஒரு டிரா என்ற நிலையில் உள்ள மும்பை சிட்டி எஃப்.சி. அணியும், விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவிய ஒடிசா எஃப்.சி. அணியும் இன்றைய ஆட்டத்தில் மோதின. மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒடிசா எஃசி வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடினர். அந்த அணியின் சிஸ்கோ ஹெர்னான்டெஸ் (6ஆவது நிமிடம்), அரிடேன் சாண்டனா (21ஆவது நிமிடம்), ஜெர்ரி (40ஆவது நிமிடம்) என வரிசையாக கோல் அடித்ததால் முதல் பாதியிலேயே 3-0 என முன்னிலை வகித்தது.
ஐஎஸ்எல் கால்பந்து: மும்பை சிட்டி எஃப்.சி.யை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த ஒடிசா எஃப்.சி. - Mumbai FC vs Odisha FC
ஐ.எஸ்.எல். கால்பந்து ஆறாவது சீசனில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை சிட்டி எஃப்.சி. அணியை ஒடிசா எஃப்.சி. அணி வீழ்த்தியது.
அதன்பின் தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஒடிசா வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இருப்பினும் மும்பை வீரர் முகம்மது லார்பி பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்து 51ஆவது நிமிடத்தில் கோல் அடித்து மும்பையின் கோல் கணக்கை தொடங்கினார். ஆனால் அதன்பின்னும் மும்பை வீரர்கள் கோல் அடிக்கத் திணறினர். மீண்டும் ஒடிசா வீரர் அரிடேன் சாண்டனா 70 நிமிடத்தில் கோல் அடித்தார்.
பின்னர் இறுதிவரை மும்பை வீரர்கள் கோல் அடிக்காத நிலையில், கூடுதலாக ஒதுக்கப்பட்ட நேரத்தில் மீண்டும் ஒடிசா வீரர் ஃபிரான்சிஸ்கோ டோரோன்சோ ஒரு ஆஃப் சைட் கோல் அடித்தார். இதனால் ஒடிசா அணி 4-2 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி நடப்பு தொடரில் முதல் வெற்றியை ருசித்தது.