இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது.
பரபரப்பாக நடைப்பெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் லூயிஸ் மச்சாடோ கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு எஃப்சி அணிக்கு 48ஆவது நிமிடத்தில் ராகுல் பேக்கே கோலடித்து, அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற கணக்கில் இருந்ததால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு எஃப்சி அணி 13 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 12 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திலும் நீடிக்கின்றன.
இதையும் படிங்க:'அறுவை சிகிச்சை முடிந்தது; மீண்டும் களமிறங்குவேன்' - ரவீந்திர ஜடேஜா