இந்தியன் சூப்பர் லீக்கில் (ஐ.எஸ்.எல்.) வரவிருக்கும் சீசனில் தற்போதுள்ள டெல்லி டைனமோஸுக்கு பதிலாக ஒடிசா எஃப்.சி. என்ற புதிய அணி களமிறங்க உள்ளது. இந்த அணிக்கான இலச்சினையை இன்று அந்த அணியின் உரிமையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "டெல்லி கால்பந்து சங்கம் மற்றும் ஒடிசா அரசுக்கு இடையே கடந்த மாதம் கையெழுத்தான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னர் தற்போது ஒடிசா எஃப்.சி. என்ற அணி உருவாக்கப்பட்டுள்ளது.
ஒடிசா எஃப்.சி.யின் இலச்சினையானது அம்மாநிலத்தின் பாரம்பரியம், கலாசாரம், அந்த அணியின் உரிமை நிறுவனமான ஜி.எம்.எஸ். ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த இலச்சினையின் டேக் லைனாக ”அமா டீம் அமா கேம்” என பதிவிட்டு இது எங்களுடைய அணி, இது எங்களுடைய ஆட்டம் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒடிசா எஃப்.சி. அணியின் அதிகாரப்பூர்வ இலச்சினை
இந்த ஆண்டிற்கான இந்தியன் சூப்பர் லீக்கின் ஆறாவது சீசன் வருகிற அக்டோபர் 20 முதல் தொடங்குகிறது. இதில் ஒடிசா எஃப்.சி. அணிக்கான முதல் போட்டியை கலிங்கா விளையாட்டரங்கில் நவம்பர் 24ஆம் தேதி விளையாடும் என ஐ.எஸ்.எல். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.