ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது களைக்கட்டத் தொடங்கியுள்ளன. பாம்போலியத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி அணி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியின் 3ஆவது நிமிடத்திலேயே மும்பை சிட்டி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்திய ஆடம், கோலடித்து அணியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹ்யூகோ போமஸ் ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவின்போது மும்பை சிட்டி எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வலிமையான நிலையில் இருந்தது.