இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் களைகட்டியுள்ளன. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் எஃப்சி கோவா அணி - ஹைதராபாத் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோலேதுமின்றி சமிநிலையில் இருந்தன.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணிக்கு 58ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் சாந்தனா கோலடித்து உதவினார்.
பின்னர் தொடர்ந்து கோலடிக்க முயற்சி செய்துவந்த கோவா அணிக்கு ஆட்டத்தின் 87ஆவது நிமிடத்தில் இஷான் பண்டிதாவும், கூடுதல் நேரமான 90+1ஆவது நிமிடத்தில் இகோர் அங்குலோவும் கோலடித்து அணியை வெற்றி பெறச்செய்தனர்.
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் எஃப்சி கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் எஃப்சி கோவா அணி 14 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க:இபிஎல்: வெஸ்ட் போர்ம் அணியைப் பந்தாடிய லீட்ஸ் யுனைடெட்!