இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த இந்தத் தொடரில் தற்போது சிறிய இடைவேளை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஐ.எஸ்.எல். தொடரில் உள்ள பத்து அணிகளும் தலா நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளன.
இதில் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில் கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஜாம்ஷெட்பூர் ஆகிய அணிகளும், நடப்பு சாம்பியனான பெங்களூரு எஃப்.சி அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. ஆனால் இரண்டு முறை சாம்பியன் மகுடத்தை சூடிய சென்னையின் எஃப்.சி. அணி கடந்த சீசனைப் போலவே இம்முறையும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அந்த அணி மூன்று தோல்வி, ஒரு டிரா என ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.