இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, எஃப்சி கோவா அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலியே கேரள அணி கோல் அடித்து ஆட்டத்தை மிரட்டலாக தொடக்கியது. த்ரோ மூலம், கிடைத்த வாய்ப்பை கேரள வீரர் செர்ஜியோ சிடோன்சா பயன்படுத்தி அதை கோலாக மாற்றினார்.
இதனால், நேரு கோச்சி மைதானத்திலிருந்த கேரள அணியின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடபடத் தொடங்கினர். இதையடுத்து, கோவா அணிக்கு 42ஆவது நிமிடத்தில் ஃப்ரீகிக் கிடைத்தது. எடு பெடியாவின் க்ராஸோ (Cross) சக வீரர் மோர்டவுடா ஃபால் ஹெட்டர் முறையில் மிரட்டலான கோல் அடித்து முதல் பாதி முடிவில் ஆட்டத்தை சமன் செய்தார்.
இதன்பின் தொடங்கிய இரண்டாம் பாதி கோவா அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஆட்டத்தின் 52ஆவது நிமிடத்தில் கேரள அணியின் ஃபார்வெர்டு வீரர் பார்தோலோமியூ ஒக்பேஷேவை (Bartholomew Ogbeche) ஃபுவல் செய்ததால், கோவா வீரர் மோர்டவுடாவுக்கு நடுவர் ரெட் கார்ட் வழங்கினார். இதனால், கோவா அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதையடுத்து ஐந்தே நிமிடங்களில் கேரள வீரர் ரஃபேல் மெஸ்ஸி பவுலி கோல் அடிக்க மீண்டும் கேரள ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆட்டம் 90 நிமிடங்கள் கடந்த நிலையில், ஸ்டாப்பேஜ் டைமாக ஐந்து நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது.