தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல்: தோல்விக்கு பழிதீர்த்த நார்த் ஈஸ்ட்; டிராவில் முடிந்த கோவா - ஏடிகே ஆட்டம்! - எஃப்சி கோவா

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று (ஜனவரி 18) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தியது.

ISL: Goa come from behind to draw battle of fortunes against ATKMB
ISL: Goa come from behind to draw battle of fortunes against ATKMB

By

Published : Jan 18, 2021, 7:41 AM IST

ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று (ஜன.17) மாலை ஐந்து மணிக்கு தொடங்கிய லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

பரபரப்பான இப்போட்டியில் ஆரம்பத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நார்த் ஈஸ்ட் அணி ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் அசுதோஷ் மேத்தா கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு பிரௌன் மூலம் 61ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு கோல் கிடைத்தது. மறுமுனையில் தோல்வியை தவிர்க்க போராடி வந்த ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கு பீட்டர் ஹார்ட்லி 89ஆவது நிமிடத்தில் கோலடித்து நம்பிக்கையளித்தார்.

இருப்பினும் இறுதிவரை போராடிய ஜாம்ஷெட்பூர் அணியால் அதன்பின் கோலடிக்க முடியவில்லை. இதன்மூலம் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இத்தொடரில் நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய மற்றொரு லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி - ஏடிகே மோகன் பாகன் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இதனால் இப்போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: IND vs AUS : சுந்தர், ஷர்துல் அதிரடியால் ஃபாலோ ஆனை தவிர்த்த இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details