இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் நடைபெற்றுவருகிறது. இந்த சீசனில் இன்று நடைபெற்ற ஒன்பதாவது லீக் போட்டியில் கோவா எஃப்.சி. - பெங்களூரு எஃப்.சி. அணிகள் மோதின. முன்னதாக இந்த இரு அணிகளும் கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் மோதியிருந்தன. அப்போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
எனவே அதற்கு தனது சொந்த மண்ணில் வைத்தே பெங்களூருவை இன்றையப் போட்டியில் கோவா அணி பழிதீர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதனிடையே, கோவா ஜவர்ஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணி வீரர்களும் சமபலத்துடன் மோதினர். இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிவடைந்தது.