கரோனா பாதுகாப்பு சூழலுடன் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெறுகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி - ஒடிசா எஃப்சி அணியை எதிர்கொள்கிறது.
பாம்போலியம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சீசனில் பெங்களூரு அணி ஒரு போட்டியில்கூட தோல்வியை சந்திக்காமல் இருப்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பெங்களூரு எஃப்சி :
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தலைமையிலான, பெங்களூரு எஃப்சி அணி நடப்பு ஐஎஸ்எல் தொடரில் தோல்வியையே சந்திக்காத அணியாக இருந்து வருகிறது.
இந்த சீசனில் இதுவரை 5 லீக் ஆட்டங்களில் விளையாடவுள்ள பெங்களூரு எஃப்சி அணி இரண்டு வெற்றியையும், மூன்று போட்டிகளை டிராவிலும் முடித்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் தனது வெற்றியை தக்கவைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஒடிசா எஃப்சி:
நடப்பு ஐஎஸ்எல் சீசனில் ஒடிசா எஃப்சி அணி வெற்றியை இதுவரை சந்திக்கவில்லை. ஐந்து லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள ஒடிசா எஃப்சி அணி நான்கு தோல்விகளையும், ஒரு போட்டியை டிராவிலும் முடித்துள்ளது.
இதனால் இனிவரும் போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்று ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க:‘சீசனின் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறோம்’ - அர்ஷ்தீப் சிங்