ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியின் 17ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் பிரவீன் கோலடித்து அசத்தினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெங்களூரு அணியின் சில்வா ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் கோலடித்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணியின் கிறிஸ்டியன் ஆட்டத்தின் 51ஆவது நிடத்தில் கோலடிக்க, அவரைத் தொடர்ந்து ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் டிமாஸ் கோலடித்து அணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார்.
தொல்வியைத் தவிர்க போராடிய கேரளா அணிக்கு கோமஸ் ஆட்டத்தின் 61 ஆவது நிமிடத்தில் கோலடித்து நம்பிக்கையளித்தார். இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த பெங்களூரு அணிக்கு கேப்டன் சுனில் சேத்ரி ஆட்டத்தின் 65ஆவது நிமிடத்தில் கோலடித்து வெற்றியை தேடித்தந்தார். அதன் பின் கேரளா அணி கோலடிக்க முயற்சித்த அனைத்து யுக்திகளையும் பெங்களூரு அணி தகர்த்தது.
இதனால் ஆட்டநேர முடிவில் பெங்களூரு எஃப்சி அணி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு எஃப்சி அணி 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.
இப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலடிக்க தவறியதால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிபிஎல்: துவார்ஷுயிஸ் பந்துவீச்சில் சுருண்ட ரெனிகேட்ஸ்; சிக்சர்ஸ் அபார வெற்றி!