விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி - ஒடிசா எஃப்சி அணியை எதிர்கொண்டது.
சுனில் சேத்ரி அசத்தல்
பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியில் பெங்களூரு எஃப்சி அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்டத்தின் 32ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி கோலடித்து அசத்தினார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தின் 71ஆவது நிமிடத்தில் ஒடிசா எஃப்சி அணியின் ஸ்டீவன் டெய்லர் கோலடித்து நம்பிக்கையளித்தார். ஆனால் மீண்டும் அட்டாக்கிங் ஆட்டத்தைக் கையிலெடுத்த பெங்களூரு எஃப்சி அணிக்கு ஆட்டத்தின் 79ஆவது நிமிடத்தில் சில்வா கோலடித்து வெற்றியை உறுதிசெய்தார்.