ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தி எஃப்சி கோவா அணி - ஈஸ்ட் பெங்கால் அணியை எதிர்கொண்டது.
பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கடுமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோலடிக்க முயற்சி செய்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்புத் தொற்றிக்கொண்டது. இதில் ஆட்டத்தின் 79ஆவது நிமிடத்தில் எஃப்சி கோவா அணியின் பிரைட் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.