தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல்: ஜாம்ஷெட்பூர் vs நார்த் ஈஸ்ட் யுனைடெட்; கோவா vs ஏடிகே மோகன் பாகன்! - கோவா

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ISL 7: Mohun Bagan face in-form FC Goa
ISL 7: Mohun Bagan face in-form FC Goa

By

Published : Jan 17, 2021, 11:33 AM IST

கரோன அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் இன்று (ஜன.17) மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியும், எட்டாம் இடத்தில் இருக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் முந்தைய தோல்விக்கு பழி தீர்க்கும் முயற்சியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி இன்றைய ஆட்டத்தில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஏடிகே மோகன் பாகன் அணி, மூன்றாம் இடத்தில் இருக்கும் எஃப்சி கோவா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதற்கு முன் இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி 1-0 என்ற கோல் கனக்கில் எஃப்சி கோவா அணியை வீழ்த்தியது. இதனால் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: மும்முறை தாண்டுதலில் உலக சாதனை படைத்த ஜாங்கோ!

ABOUT THE AUTHOR

...view details