தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல்: முதல் அரையிறுதியில் மோதும் மும்பை - கோவா! - எஃப்சி கோவா

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி அணி - எஃப்சி கோவா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ISL 7: League winner Mumbai City FC take on FC Goa in first semi-final
ISL 7: League winner Mumbai City FC take on FC Goa in first semi-final

By

Published : Mar 5, 2021, 11:56 AM IST

கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சூப்பர் லீக் கால்பந்து திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. நடப்பு சீசனுக்கான பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை சிட்டி எஃப்சி, ஏடிகே மோகன் பாகன், எஃப்சி கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் தேர்வாகின.

இதில் மும்பை சிட்டி எஃப்சி அணி 20 போட்டிகளில் 12 வெற்றி, 4 தோல்வி, 4 டிரா என மொத்தம் 40 புள்ளிகளைப் பெற்று ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கும் மும்பை சிட்டி எஃப்சி அணியும், பட்டியலில் நான்காம் இடத்திலிருக்கும் எஃப்சி கோவா அணியும் மோதுகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. முன்னதாக இரு அணிகளும் மோதிய லீக் ஆட்டங்களில் ஒன்றில் மும்பை சிட்டி எஃப்சி அணியும், மற்றொரு போட்டி டிராவிலும் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:90’ஸ் ஹீரோக்கள் ரீ எண்ட்ரி; காத்திருப்பில் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details