தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐஎஸ்எல் : வெற்றி பாதையை தக்கவைப்பது யார்? கேரளா பிளாஸ்டர்ஸ் vs ஈஸ்ட் பெங்கால்!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ISL 7: In-form East Bengal face leaky Kerala Blasters
ISL 7: In-form East Bengal face leaky Kerala BlaISL 7: In-form East Bengal face leaky Kerala Blasterssters

By

Published : Jan 15, 2021, 11:42 AM IST

ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலின் 9ஆம் இடத்தில் இருக்கும் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணி, 10ஆவது இடத்திலிருக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

திலக் மைதான் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. நடப்பு ஐஎஸ்எல் சீசனில் இரு அணிகளும் படுதோல்விகளைச் சந்தித்துள்ளதால், இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஈஸ்ட் பெங்கால் எஃப்சி:

நடப்பு ஐஎஸ்எல் சீசனில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணி தொடக்கம் முதலே படு தோல்விகளைச் சந்தித்து புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது. அதன்பின் விளையாடிய கடைசி மூன்று போட்டிகளில் 2 வெற்றியைப் பெற்றது.

இதுவரை 10 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள ஈஸ்ட் பெங்கால் அணி 2 போட்டிகளில் வெற்றியையும், 4 தோல்வி, 4 போட்டிகளை டிராவிலும் முடித்துள்ளது. இதன்மூலம் 10 புள்ளிகளுடனும் புள்ளிப்பட்டியலின் 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல் 4 இடத்திற்குள் ஈஸ்ட் பெங்கால் அணி இடம்பிடிக்க முடியும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கேரளா பிளாஸ்டர்ஸ்

ஐஎஸ்எல் தொடர் வரலாற்றில் வலிமையான அணி என்ற பெயரைப் பெற்றிருந்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு, இந்த சீசன் படுமோசமான பெயரை பெற்றுத் தந்துள்ளது.

இதுவரை 10 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இரண்டு வெற்றி, மூன்று டிரா, ஐந்து தோல்விகளைச் சந்தித்து ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலின் 10ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கேரளா அணியும் இனிவரும் அனைத்து லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே, பிளே ஆஃப் சுற்று குறித்து யோசிக்க முடியும் என்பதால் அந்த அணியும் வெற்றி பெற போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க: விக்கெட்டுடன் கம்பேக் கொடுத்த ஸ்ரீசாந்த்!

ABOUT THE AUTHOR

...view details