ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் நேற்று (பிப்.07) இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் மோதியது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால், முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தன.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணிகளும், எதிரணியின் கோலடிக்கும் முயற்சிகளை தகர்த்தன. ஆட்டநேர முடிவு நேரம் வரை இரு அணிகளும் கோல் போடாததால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக மாலை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி - ஈஸ்ட் பெங்கால் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஈஸ்ட் பெங்கால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: இந்திய டென்னிஸ் ஜாம்பவான் அக்தர் அலி உயிரிழந்தார்