இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் நேற்று (பிப்.04) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி - எஃப்சி கோவா அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் தொடக்கத்திலேயே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கோவா அணிக்கு ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் அலெக்சாண்ட்ரோ ரொமரியோ மூலம் முதல் கோல் கிடைத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் விளையாடி நார்த் ஈஸ்ட் அணி ஃபெட்ரிகோ கல்லேகோ ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தில் சமநிலையை உருவாக்கினார்.
இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் நீடித்தன. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட கோவா அணியின் குமார் ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார்.