ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி - பெங்களூரு எஃப்சி அணியை எதிர்கொண்டார்.
பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணியினரும் டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணியும் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தன.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி ஆட்டத்தின் 56ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃபெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோலடித்து அசத்தினார். இறுதிவரை போராடிய சென்னையின் எஃப்சி அணி கோலடிக்க இயலவில்லை.
இதனால் ஆட்டநேர முடிவில் பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு எஃப்சி அணி 5 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலின் மூன்றாமிடத்திற்கு முன்னேறியது.
இதையும் படிங்க: IND vs AUS: மாற்று வீரராக களமிறங்கி அசத்திய சஹால்!